புதுச்சேரி:
புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.

புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஆனந்தபாபு நடராஜன், துணைத்தலைவர்களாக கல்யாணசுந்தரம், சேகர், ஜமீர்அகமதுஅல்பாசி, குணசேகர், ஜெயராமன், கோவளன், டேனியல்ராஜ், கயல்விழி ஆகியோரும், 23 தொகுதிகளுக்கான வட்டார தலைவர்களும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா கம்பன் கலையரங்கில் நடந்தது.

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஸ்ரீனிவாஸ் முன்னிலையில் உறுதிமொழி ஏற்று மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக ஆனந்தபாபு நடராஜன் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்றனர்.

பதவியேற்பு விழாவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜோஸ்னா ஜெரால்டு, சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், ஆகியோர் கலந்து கொண்டனர்,