புத்தாண்டு முதல் புதிய 50 ரூபாய்! ரிசர்வ் வங்கி

டில்லி,

புத்தாண்டு முதல் புதிய 50 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 50 ரூபாயை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதே நேரத்தில் பழைய ரூபாய் நோட்டும் செல்லும் என்றும் கூறி உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ள இந்த புதிய 50 ரூபாய் நோட்டுகளில் தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கையொப்பம் இடம்பெற்றுள்ளது. இந்த ரூபாய் நோட்டின் நிறம் வெளிர் நீல நிறத்தில் உள்ளது.

இந்த 50 ரூபாய் நோட்டின் பின்பகுதியில்   இந்திய பண்பாட்டை பிரதிபலிக்கும் விதமாக, கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள தேர் சிற்பமும் இடம் பெற்றுள்ளது.

இந்த புதிய 50 ரூபாய் நோட்டுகள் புத்தாண்டு முதல் புழக்கத்துக்கு வரும் என்று கூறப்படுகிறது.

மேலும், புதிய 50 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த பிறகும் தற்போதைய 50 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
English Summary
New 50 rupees note from New Year? Reserve Bank