நடிகையும், இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் ஆக்டிவாக இருப்பவர்.

சமீபத்தில் ஒரு பதிவு போட்டு நெட்டிசன்களிடம் மாட்டி கொண்டார் .

ஏ+ ரத்த வகையை சேர்ந்த யாராவது பிளாஸ்மா தானம் செய்ய முடியுமா?. தயவு செய்து தெரிவிக்கவும். எங்கள் கம்யூனிட்டியை சேர்ந்த ஒருவர் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.என்று ட்வீட் போட்டிருந்தார் .

லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ட்வீட்டை பார்த்தவர்கள் அதென்ன கம்யூனிட்டி?. உங்கள் ஜாதி புத்தியை காண்பித்துவிட்டீர்களே. பிளாஸ்மா தானத்தில் கூட ஜாதியா?.பிளாஸ்மா வேணும்னு கேட்க வேண்டியது தானே. அது என்ன எங்க கம்யூனிட்டி என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என் போஸ்ட்டை பார்த்து வந்திருக்கும் ட்வீட்டுகள் அறியாமையை காட்டுகிறது. கம்யூனிட்டி என்றால் கேட்டட் கம்யூனிட்டி(gated community),அபார்ட்மென்ட் காம்பிளக்ஸ்.

https://twitter.com/LakshmyRamki/status/1298279333765685248

எங்கள் கேட்டட் கம்யூனிட்டியை சேர்ந்த நண்பர் ஒருவருக்கு பிளாஸ்மா தேவைப்படுகிறது என்று நான் போட்ட ட்வீட் ஜாதியை பற்றியது என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.