திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே உள்ள ஆசிரமத்தில் மாணவி தற்கொலை செய்துக் கொண்டது குறித்து நெட்டிசன்கள் கண்டனம் எழுப்பி உள்ளனர்.

திருவள்ளூரில் பூண்டி ஒன்றியம் வெளாத்து கோட்டை என்னும் சிற்றூரில் கடந்த 20 ஆண்டுகளாக முனியசாமி என்னும் சாமியார் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார்.  திருவள்ளூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி ஹேமமாலினி உடல் நலக் குறைவு காரணமாக ஆசிரமம் சென்று வந்துள்ளார்.   

அவருக்கு நாக தோஷம் எனக் கூறிய முனியசாமி தோஷம் கழிக்கப் பூஜை நடத்த வேண்டும் என ஆசிரமத்தில் தங்க வைத்துள்ளார்.   கடந்த 13 ஆம் தேதி இரவு பூஜை நடந்துள்ளது.   அடுத்த நாள் அதிகாலை ஹேமமாலினி திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.  ஹேமமாலினியின் பெரியம்மா ஆம்புலன்ஸ் வரவழைக்க வேண்டும் என முனியசாமியிடம் கூறி உள்ளார்.

முனியசாமி 2 மணி நேரத்துக்கு பிறகே ஆட்டோவில் மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளார்.  அங்குள்ள தனியார் மருத்துவமனையில் ஹேமமாலினி பூச்சி மருந்து சாப்பிட்டுள்ளதால் சிகிச்சை அளிக்க மறுத்துள்ளனர்.  பிறகு அவர் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு நேற்று உயிர் இழந்தார்.  இது குறித்து வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

இது குறித்து நெட்டிசன்கள் டிவிட்டரில்,

 “மாணவி தற்கொலை

வீட்டுக்குக் கூட அனுப்பாமல் ஆசிரமத்தில் கட்டாயமாகத் தங்க வைக்கப்பட்டு இருந்தார்

சாமியார் மீது நடவடிக்கை வேண்டி இறந்த பெண்ணுக்கு நியாயம் வேண்டி @BJP4TamilNadu @SuryahSG @Selvakumar_IN @VanathiBJP @annamalai_k போன்றோர் போராடுவார்களா? சாமியார் மீது நடவடிக்கை கேட்பார்களா?” 

என கடும் விமர்சனம் எழுப்பி உள்ளனர்.