“நேர்கொண்ட பார்வை” திருவிழா ஆரம்பம்….!

Must read

போனி கபூரின் லட்சிய தமிழ் படமான “நேர்கொண்ட பார்வை” ஆகஸ்ட் 6 ஆம் தேதி சிங்கப்பூர் திரையரங்குகளில் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது.

அஜித் , ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆன்ட்ரியா தாரியாங், அபிராமி வெங்கடாச்சலம், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடித்துள்ள, இந்த படத்தை எச். வினோத் இயக்கியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு இந்தியில் வெளிவந்த ‘பிங்க்’ திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேக் தான் இந்த படம் . நாளை ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகளவில் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் நேர்கொண்ட பார்வை திருவிழா ஆரம்பித்துள்ளது. இப்படத்தின் முன்பதிவு குறித்தும், சிங்கப்பூரில் நடைபெற்ற பிரீமியர் காட்சி குறித்தும் சமூக ஊடகங்களில் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.

More articles

Latest article