1979-ம் ஆண்டு வெளியான கமல், ஶ்ரீதேவி நடித்த ‘நீயா’ படத்தின் இரண்டாம் பாகம் ‘நீயா 2’ இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஜெய், லட்சுமி ராய், கேத்ரின் தெரசா மற்றும் வரலட்சுமி நடித்துள்ளனர்.

சபிர் இந்தப் படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். சென்சார் போர்ட் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கொடுத்துள்ளது.

படப்பிடிப்பை முடித்திருக்கும் படக்குழு சமீபத்தில் ட்ரெய்லரை வெளியிட்டது. மார்ச் மாதத்தில் படம் திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது மே மாதம் 24 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.