திருவனந்தபுரம்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தரகராக செயல்பட்ட ஜோசப் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

தேனி மருத்துவக் கல்லூரியில் இந்த வருடம் முதலாமாண்டு பட்டப்படிப்பில் சேர்ண்ட உதித் சூர்யா என்பவர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றது கண்டறியப்பட்டுள்ளது.   தலைமறைவான உதித் சூர்யா மற்றும் அவர் தந்தை ஆகியோர் திருப்பதியில் கைது செய்யப்பட்டனர்.

தற்போது காவல்துறை விசாரணையில் உள்ள இருவரும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக கொண்டுள்ளனர்.  மேலும் உதித் சூர்யாவின் தந்தை தனக்கு இந்த ஆள்மாறாட்ட விவகாரத்தில் மும்பையைச் சேர்ந்த ஜோசப் என்னும் தரகர் உதவியதாகக் கூறி இருந்தார்.  காவல்துறையினர் ஜோசப்பை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில் தரகர் ஜோசப் கேரள மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.  கைது செய்யப்பட்ட தரகர் ஜோசப் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.