டில்லி

லகின் பிரபல தேடுதளமான கூகுள் தனது 21 ஆம் பிறந்தநாளையொட்டி புதிய டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தற்போது உலகின் மிகப் பிரபல தேடு தளமாகக் கூகுள் விளங்கி வருகிறது.  கடந்த 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று கலிஃபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களான லாரி பேஜ் மற்றும், செர்ஜி பிரின் ஆகியோர் இந்த தேடுதளத்தை உருவாக்கினர்.

பலருக்குத் தகவலைத் தேடித் தரும் கூகுள் இன்று தனது 21 ஆம் பிறந்த நாளை  கொண்டாடுகிறது.   இந்த தளத்துக்கு googol என பெயரிடப்பட்டது.  கணிதத்தில் 10 இன் அடுக்கு 100 எனப் பொருள் கொண்ட இந்தப்பெயர் மருவி கூகுள் (GOOGLE) என மாறியது.

இன்று தனது பிறந்த நாளையொட்டி கூகுள் ஒரு புதிய டூடுலை வெளியிட்டுள்ளது.   இந்த டூடுலில் பழைய கணிப்பொறியில் கூகுள் பக்கம் திறக்கப்பட்டு அதில் கூகுள் நிறுவனம் தொடங்கப்பட்ட தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.