பாட்னா

பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பாஜகவுக்கு எதிராகப் பேசி வருவது அம்மாநில அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 1984 ஆம் வருடம் ஜனதா தளம் கட்சியில் இருந்து நிதீஷ் குமார் விலகியதில் இருந்து அவரது ஒவ்வொரு அசைவும் அரசியல் நோக்கர்களால் கவனிக்கப்படுகிறது.   அப்போது அவர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் உடன் இணைந்து சமதா கட்சியை தொடங்கினார்.  அதற்கு இரு வருடங்களுக்குப் பிறகு நிதிஷ்குமார் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார்.   இந்த கூட்டணி 2013 முதல் 201 வரை தொடர்ந்தது.

மோடியைப் பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்ததில் இருந்து நிதிஷ்குமார் பாஜக மீது அதிருப்தியுடன் இருந்தாலும் அந்தக் கூட்டணி 2015 முதல் 2017 வரை தொடர்ந்தது.   அதன் பிறகு லாலுபிரசத் யாதவுடன் இணைந்து பாஜகவை நிதிஷ்குமார் எதிர்க்க தொடக்கினார்.  லாலு தனது இரு மகன்களை பதவியில் அமர்த்த நிதிஷ்குமாருடன் கூட்டணி அமைத்ததாகச் சொல்லப்பட்ட போதிலும்  கூட்டணி அரசின் முதல்வராக நிதிஷ் பதவி ஏற்றார்,.  அதன் பிறகு அந்தக் கூட்டணி முறிந்து பாஜகவுடன் நிதிஷ்குமாருக்கு இணக்கம் ஏற்பட்டது.

பாட்னா நகரில் உள்ள பைலி சாலை என்பது பீகார் மற்றும் ஒருசாவின் முதல் ஆளுநரான சர் ஸ்டிவர்ட் கால்வின் பைலியின் பெயரிடப்பட்ட சாலை ஆகும்.  அதன் பிறகு அந்தச் சாலை ஜவகர்லால் நேரு மார்க் என  பெயரிடப்பட்டது.   அதை தற்போது நிதிஷ் குமார் அரசு நேரு பாதை என மாற்றி உள்ளது.   பாஜகவினர் நேருவின் அரசியலை கடுமையாக விமர்சித்து வருகையில் இந்த பெயர் மாற்றத்தால் அரசியல் பரபரப்பு உண்டானது.

அடுத்தபடியாக தசரா விழாவை பத்து நாட்கள் நடத்த பாஜக அனுமதி கேட்டிருந்த நிலையி8ல் அது நிதிஷ்குமார் அரசால் மறுக்கப்பட்டுள்ளது.   வழக்கமாக தசரா அன்று நடக்கும் ராவண வதம் நிகழ்வுக்கு கூட அனுமதி வழங்குவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.  இதையும் பாஜக ஒரு கவுரவப் பிரச்சினையாகக் கருதி வருகிறது.   எனவே அரசியல் நோக்கர்கள் நிதிஷ்குமாருக்கும் பாஜகவுக்கும் இடையில் மீண்டும் பிளவு ஏற்பட்டு வருவதாகக் கூறுகின்றனர்.