சென்னை:

ன்று வெளியான நீட் தேர்வு முடிவு தமிழக மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.

நாடு முழுவதும் 11,38,890 மாணவர்கள் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்தனர். . இவர்களில் ல் மாணவர்கள், 4,97,043. மாணவிகள் 6,41,839. திருநங்கைகள் 8 பேர். விண்ணப்பித்தவர்களில் 48,805 பேர் இந்தத் தேர்வை எழுதவில்லை. தேர்வு எழுதிய 10,90,085 பேரில் 6,11,539 பேர் தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி பெற்றவர்களில் மாணவர்களின் எண்ணிக்கை, 2,66,221. மாணவிகள், 3,45,313. திருநங்கைகளல் 5 பேர்.

மொத்தத்தில்  4,78,546 பேரை மருத்துவப் படிப்புக்குத் தகுதியில்லாதவர்கள் என்று இந்த நீட் தேர்வு நிராகரித்திருக்கிறது.

நீட் தேர்வை எழுதிய 80 சதவீதம் பேர் ஆங்கிலத்தில்தான் எழுதினர்.  10 சதவீதம் பேர் இந்தியில் எழுதினர்.  15,206 மாணவர்கள் மட்டுமே தமிழில் எழுதினர்.

தேர்ச்சி பெற்றுள்ள 6,11,739 மாணவர்களில் எஸ்.சி. பிரிவைச் சேர்ந்தவர்கள் 14,637 பேர் மட்டுமே.  எஸ்.டி. பிரிவைச் சேர்ந்தவர்கள் 6,028 பேர்.

இந்தத் தேர்வில் அகில இந்திய அளவில் பஞ்சாபைச் சேர்ந்த நவ்தீப் சிங் என்ற மாணவர் முதலிடம் பெற்றிருக்கிறார்.  மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்சித் குப்தா இரண்டாம் இடத்தையும், மனீஷ் முல்சந்தானி மூன்றாம் இடத்தையும் பெற்றிருக்கிறார்கள்.

மொத்தத்தில். டாப்-25 இடத்திற்குள் தென்னிந்தியாவைச் சேர்ந்த 7 பேர் மட்டுமே இடம் பிடித்திருக்கிறார்கள். தமிழக மாணவர் ஒருவர் கூட இந்த டாப் 25ல் இடம் பெறவில்லை.

இது தமிழக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

“தேர்வு எழுதும்போதே ஏக கெடுபிடி காட்டினார்கள். முழுக்கை சட்டை அணியக்கூடாது என்று கிழிக்க வைத்தார்கள்.. ஆனால் கிழிக்கப்பட்டது சட்டை அல்ல தமிழக மாணவர்களின் வாழ்க்கை என்பதை நிரூபித்துவிட்டார்கள்” என்று புலம்புகிறார்கள் பெற்றோர்கள்.

நீட் தேர்வு குழப்பம் பற்றி தெரிவித்து இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு காத்திருக்கிறது.

இந்த  நீட் தேர்வுக்கு எதிராக உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளுக்கும் உச்சநீதிமன்றம் தடுப்பு போட்டுவிட்டது.

இந்த நிலையில் தமிழக அரசு வழக்கம்போல பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே நிலவுகிறது.

ஆனால் எந்த ஒரு விசயத்திலும் மத்திய அரசின் கடைக்கண் பார்வைக்கு ஏற்ப செயல்படும் தமிழக அரசு அப்படியோர் முடிவை தைரியமாக எடுக்குமா என்பது பில்லியன் டாலர் கேள்வி.