கடந்த ஆண்டு நடைபெற்ற ஆடை ‘களேபரம்’

டில்லி:

கில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு எழுத வரும் மாணவ மாணவிகளின் ஆடை கட்டுப்பாடுகள் குறித்து சிபிஎஸ்இ கல்வி வாரியம்  அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின்போது,  சாரி அணியக்கூடாது என்றும், முழுக்கை சட்டை போடக்கூடாது என்பது போன்ற பல்வேறு கெடுபிடிகள் செய்யப்பட்டன.  நீண்ட கைகளை கொண்ட சுடிதான் போட்டிருந்த பெண்களின் கைகள் வெட்டி எடுக்கப்பட்டன. இதன் உச்சக்கட்டமாக   கேரளாவில் உள்ள  கண்ணுார் பகுதியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின்  போது உள்ளாடையை அகற்ற செய்து அநாகரிகமாக ஒருசிலஆசிரியைகள் நடந்துகொண்டனர்.

இந்த சம்பவம், தேர்வு எழுத வந்த பிற மாணவ, மாணவியரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது .இதற்கு பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வர் விஜயன் தனது கண்டனத்தை பதிவு செய்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மனித உரிமை கமிஷனும் சிபிஎஸ்இ கல்வி வாரியத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு வரும் மே 6ந்தேதி நடைபெற உள்ள நிலையில், ஆட்டைக்கட்டுப்பாடுகள் குறித்து சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது.

அதன்படி  வெளிர் நிறத்திலான ஆடைகளை அணிய வேண்டும். அரைக் கை சட்டைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். ஷூ அணியக் கூடாது. பூக்கள், பேட்ஜ்கள் பயன்படுத்தக் கூடாது.

பெரிய பொத்தான்களைக் கொண்ட சட்டைகளை அணியக் கூடாது. குறைவான உயரமுள்ள சாதாரண செருப்புகளையே அணிய வேண்டும். ஹை ஹீல்ஸ் அணியக்கூடாது, மொபைல் போன் போன்ற தொலைத்தொடர்பு சாதனங்கள் அனுமதி இல்லை.  ஜியோமெட்ரி பாக்ஸ் அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச் மற்றும் உலோகப் பொருள்கள் ஆகியவற்றையும் எடுத்து வரத் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.