லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலம் கோராக்பூர் பிஆர்டி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாகுறை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு 60 குழந்தைகள் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியது.

இந்த சம்பவத்தில் முதலில் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் கஃபீல் கான் ஹீரோவாக சித்தரிக்கப்பட்டார். பின்னர் இவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

தற்போது வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு உடல் நிலை பாதித்துள்ளது. ஆனால் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் சிறை நிர்வாகம் மெத்தனமாக இருந்துள்ளது.

இது குறித்து அவரது மனைவி ஷபிஸ்தான் கான் 2 நாட்களுக்கு முன்பு மீடியாக்களிடம் தெரிவித்தார். அப்போது, லக்னோ மருத்துமனைக்கு அவரை டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். ஆனால், சிறை நிர்வாகம் இதை செய்ய மறுத்து வருகிறது என்று அவர் குற்றம்சாட்டினார்.

இந்த செய்தி சில மீடியாக்களில் வெளிவந்தது. இதையடுத்து நெஞ்சு வலியான் அவதிப்பட்ட கபீல் கானை சிறைத் துறையினர் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக இன்று அழைத்து வந்தனர்.