சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியின்போது வெளியிட்டார். அதில், ஏற்கனவே 2021 சட்டமன்ற தேர்தலில் அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, ரூ.500க்கு கேஸ் உள்பட பல அறிவிப்புகள் மீண்டும் இடம்பெற்றுள்ளன.

திமுக வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,  மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு மக்களின் தேர்தல் அறிக்கையாக உள்ளது என்று கூறியவர், பாஜக கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நிறைவேற்றவில்லை. இனியும் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி தொடர்வது நாட்டுக்கு நல்லது இல்லை அதனால், மாநிலங்களை அனுசரித்து செல்லும் அரசு மத்தியில் அமைய வேண்டும்.இந்திய அரசியல் சாசன அமைப்பு சட்டத்தை காக்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும் என்றும், நாற்பதும் நமதே! நாடும் நமதே என்ற குறிக்கோளுடன் திமுகவினர் பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

திமுக தேர்தல் வாக்குறுதிகள்:

நீட் தேர்வு ரத்து செய்யப்படும்

நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும்.

மாணவர்களுக்கு வட்டி இல்லா கல்விக் கட 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்

பெட்ரோல் விலை 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயும், சிலிண்டர் விலை 500 ரூபாயும் குறைக்கப்படும்

உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.

புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்.

திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.

புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.

குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும்.

இந்திய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.

மாநிலங்கள் சுயாட்சி பெரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும்

ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்ட பிரிவு நீக்கப்படும்

திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்

மத்திய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்

இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்

காலை உணவு திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும்

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.

மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 10,00,000 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்

100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும்

தமிழ்நாட்டில் புதிதாக IIT, IIM அமைக்கப்படும்

உள்பட ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.