டில்லி :

டப்பாண்டில் நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்று  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதி மன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் 85 சதவிகித இடஒதுக்கீடு அரசாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்ததை  எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள், நடப்பாண்டில் நீட் தேர்வுக்கு தடை விதிக்க முடியாது என்றும், இதுகுறித்து சிபிஎஸ்இ கல்வி வாரியம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த முறை நடைபெற்ற விசாரணையின்போது,  மத்திய அரசு சார்பாக  ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால்  நீட் அவசர சட்டத்தை மத்திய அரசிடம் தமிழக அரசு கொடுத்துள்ளது. ஆனால் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்துக்கு எந்த ஒரு ஆலோசனையையும் தமிழக அரசு கேட்கவில்லை என கூறி, தமிழக அரசுக்கு விரோதமாக மத்திய அரசு சார்பாக வாதாடினார்.

இதன் காரணமாக மருத்துவக்கல்லூரிகளில், தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.