சென்னை,

நீட் தேர்வு விவகாரத்தில்,  குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம், இது மாணவர் எதிர்காலம் பற்றியது.  தயை கூர்ந்து உடனே பேசுங்கள் என்று கமலஹஹாசன் தனது டுவிட்டரில் மத்திய மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் அனைத்துகட்சியினர், மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்,  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றினால், நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் வகையில் ஒத்துழைப்பு அளிக்கத் தயார் என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு பரபரப்பாக அவசர சட்டம் இயற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஏற்கனவே தமிழக அரசின் ஊழல் குறித்து தனது டுவிட்டரில் கருத்துதெரிவித்து, மாநிலஅரசின் கடுமையான  எதிர்ப்புகளை சம்பாதித்து வரும் கமல், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக,  தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

நீட் தேர்வை ஒத்திப் போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது.  தயை கூர்ந்து உடனே பேசுங்கள்

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமலஹாசனின் இன்றைய டுவிட் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.