வைகோவின் மனநிலை சரி இல்லை! எச்.ராஜா அதிர்ச்சி பேச்சு

மதுரை,

திராமங்கலத்தில் ஓஎன்ஜிசியின் கருவிகளை உடைப்பேன் என்று வை.கோ பேசியிருந்ததற்கு கண்டனம் தெரிவித்த பாரதியஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா,  25 ஆண்டுகளாக வைகோ உறங்கிக் கொண்டிருந்தாரா ?  வைகோவின் மனநிலை சமநிலையில் இல்லை என்று விமர்சித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜா, வைகோ குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது,   கதிராமங்கலத்தில் 25 வருடங்களாக எண்ணெய் எடுக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வைகோ இதுநாள் வரை உறங்கிக் கொண்டிருந்தாரா, வைகோவுக்கு மனநிலை சமநிலையில் இல்லை என்று கூறினார்.

மயிலாடுதுறை குத்தாலம் அருகே உள்ள மாதிரிமங்கலத்தில் ஓஎன்ஜிசியின் எண்ணெய் குழாயில்மீண்டும்   உடைப்பு ஏற்பட்டுள்ளது.  அந்த  இடத்தை மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று பார்வையிட்டார். அப்போது, ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்களை திரட்டும் வரை அங்கேயே முகாமிடப் போவதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக கும்பகோணம் தாராசுரத்தில் செய்தியாளர்களிடம் வைகோ பேசும்போது,  போராட்டத்தை தூண்டுவோர் மீது வழக்கு தொடுப்போம் என்று ஓஎன்ஜிசி நிறுவனம் மிரட்டியுள்ளது. நானே போராட்டத்தை தூண்டிவிட்டேன். ஓஎன்ஜிசி வெளியேறாவிட்டால் கருவிகளை உடைப்பேன். என் மீது வழக்கு தொடரட்டும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Vaiko's mood is not right! H.Raja 'arrogant' Talk