
சென்னை:
பிரதமர் மோடி இன்று சென்னைக்கு வந்திருப்பதை யொட்டி, தமிழகம் முழுவதும் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்குள் பலத்த பாதுகாப்பையும் மீறி இயக்குனர்கள் பாரதிராஜா, வெற்றி மாறன், கவுதமன், அமிர் ஆகியோர் சென்று, மோடிக்கு எதிராக கோஷமிட்டு போராட்டம் நடத்தினார். இதன் காரணமாக விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில், மோடிக்கு கருப்புகொடி காட்ட சீமான் தலைமையில் சிலர் சென்னை திரிசூலம் அருகே திடீரென கூட ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
அதே நேரத்தில் ஆலந்தூர், சின்னமலை பகுதியில் நெடுமாறன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இதுபோன்று சென்னையில் பல இடங்களில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]