சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள  காவிரி மீட்பு நடைபயணம் இன்று 6வது நாளாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், பிரதமர் மோடி சென்னை வந்ததை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டுள்ள காவிரி உரிமை மீட்பு பயனத்தை வைத்தீஸ்வரன்கோவிலியே முடித்து கொள்ளக் கூறி சீர்காழி போலிசார் சம்மன் கொடுக்க முன்வந்தனர்.

ஆனால், அதை வாங்க மறுப்பு தெரிவித்து ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கனவே  கடந்த ஏப்ரல் 7ம் தேதி பிற்பகலில் திருச்சி முக்கொம்பில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய ஸ்டாலின் நேற்று  நாகை மாவட்டத்தில்  பயணம் மேற்கொண்டார். நாகை வேளாங்கண்ணியில் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து பரவை, பாப்பா கோவில், சிக்கல் பத்து, அகரஒரத்தூர், ஒரத்தூர், ஆயில்மலை, அகலங்கால், செம்பியன் மாதேவி, வடுகசேரி , புதுச்சேரி, ஆவராணி, சிக்கல், புத்தூர் ஆகிய இடங்களுக்கு சென்றார். செம்பியன்மா தேவியில் விவசாயிகள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மாலையில் காரைக்காலில் தொடங்கிய பயணம் பொறையாறு, திருக்களச்சேரி, , எடுத்துக் கட்டி, இலுப்பூர், செம்பனார்கோவில், மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு சென்றது. இரவில் வைத்தீஸ்வரன்கோவிலில் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் தங்கினர்.

இன்று 6வதுநாளாக  காலை 9 மணியளவில் வைத்தீஸ்வரன் கோவிலில் தொடங்கி நடந்து வருகிறார். அவருடன்  இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளும், காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

சென்னைக்கு இன்று வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நடந்த காவிரி மீட்பு பயணத்தில் மு.க.ஸ்டாலின் கருப்பு சட்டை- கருப்பு பேண்ட் அணிந்திருந்தார். இதேபோல் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கருப்பு சட்டை , பேட்ஜ் அணிந்து கொண்டு சென்றனர்.

வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து தொடங்கிய பயணம் கொள்ளிடம், வல்லம்படுகை வழியாக கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, செல்கிறது. அதைத்தொடர்ந்து இன்று மாலை கடலூரில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.