சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு  தெரிவித்து தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று சென்னை வந்துள்ள மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி கறுப்பு சட்டை அணிந்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

மோடியின் தமிழக வருகைக்கு திமுக உள்பட தமிழக எதிர்க்கட்சியினர்கள், தமிழ் அமைப்புகள் இன்று கருப்பு கொடி காட்டப்படும் என்றும், கருப்பு சட்டை அணிந்து, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்படும் என அறிவித்திருந்தன.

அதன்படி சென்னையில் பல இடங்களில் மோடியின் சென்னை வருகையை எதிர்த்து கருப்பு கொடி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியின் இல்லம், மற்றும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி கருப்பு சட்டை அணிந்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அவருடன் கருப்பு சட்டையுடன் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உள்ளனர்.

இந்த புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.