சென்னை:

பிரதமர் மோடி இன்று கலை 9.35 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மத்திய அமைச்சர் நிர்மலா உள்பட பலர் வரவேற்றனர்.

காவிரி பிரச்சினை காரணமாக தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மத்தியஅரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை வரும்  பிரதமர் மோடிக்கு சென்னை விமான நிலையம் உள்பட தமிழகம் முழுவதும் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று காலை 9.35 மணி அளவில் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக தலைமை செயலாளர் கிரிஜா உள்பட தமிழக அரசு அதிகாரிகள், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், பொன் ராதாகிருஷ்ணன் உள்பட பாஜகவினரும் வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் புறப்பட்டு சென்றார்.