சென்னை,
முதல்வர் உடல்நிலை சீராக, தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், ஜெ.பி. நட்டா, தமிழக முதல்வரின் உடல் நலம் குறித்து டில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா

“தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வந்த தகவல் வருத்தமளிக்கிறது. ஆனாலும் அவருக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, இயல்புநிலைக்கு திரும்பி வருவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எய்ம்ஸ் சிறப்பு  மருத்துவர் கில்நானி தலைமயிலான நான்கு பேர் கொண்ட டில்லி எய்ம்ஸ் மருத்துவக்குழு சென்னை வந்துள்ளது.
அவர்கள் அப்பல்லோ மருத்துவர்களுடன் இணைந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும்,
தமிழகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு உடனடியாக செய்யும்” என்று  அவர் கூறினார்.