Skip to content
  • Fri. Jul 10th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

இந்தியாவின் மக்கள் தொகை 109 கோடியாக குறையும்… அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்

Jul 17, 2020

டெல்லி:

இந்தியாவின் மக்கள் தொகை இடைப்பட்ட காலத்தில் அதிகரித்து, 2100ம் ஆண்டு வாக்கில்  109 கோடியாக குறையும் என்று அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்  தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்காவின்  பிரபல பல்கலைக்கழகமான வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சியாளர்கள் உலக  மக்கள் தொகை குறித்து ஆராய்ச்சி நடத்தினர்.  இந்த ஆராய்ச்சியின் போருது,  கடந்த 2017  முதல் உலகளாவிய நோய் பாதிப்பு குறித்த தகவல்கள் மூலம் இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்பட 183 நாடுகளுகள் குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
மேலும், எதிர்கால மக்கள் தொகை,  இறப்பு, கருவுறுதல் மற்றும் இடம்பெயர்வு விகிதங்கள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொண்டு, அதன் முடிவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது உலக மக்கள்தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவுடன் 2100ம் ஆண்டுக்குள்   இந்தியா, நைஜீரியா மற்றும் அமெரிக்க நாடுகளும் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை 2048ம் ஆண்டில் 160 கோடியாக உயரும்.
அதேவேளையில் 2100ம் ஆண்டில்  இந்திய மக்கள் தொகையுல்  32 சதவீதம் குறைந்து 109 கோடியாகும். அதாவது 100 கோடியே 9 லட்சமாக இருக்கும் .
2017-ல் இந்தியாவில் வேலைக்கு தகுதியான வயதுடைய நபர்கள் 76.2 கோடியாக இருந்த நிலையில், 2100-ல் அது 57.8 கோடியாக குறையும்.
சீனாவில் 2017-ல் 95 கோடியாக இருந்த நிலையில், 2100-ல் 35.7 கோடியாக குறையும்.
இவ்வாறு அந்த புள்ளிவிவரப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியை  வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் (IHME) ஆராய்ச்சியாளர்கள் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post navigation

தங்கக்கடத்தலால் பரபரக்கும் கேரளா…. சட்டப்பேரவைத் தலைவரை நீக்க வலியுறுத்தி முஸ்லிம் லீக் நோட்டீஸ்…
எச்-1பி விசா ரத்து: டிரம்ப் உத்தரவை எதிர்த்து 174 இந்தியர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு

Related Post

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

இந்தியா

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை தொடர்பாக பீகார் மற்றும் உ.பி.யில் 3 பேர் கைது

இந்தியா

மே 9-ல் மேற்கு வங்கம், மே 12-ம் தேதி அசாம் மாநிலங்களில் பாஜக அமைச்சரவை பதவியேற்பு விழா:

உலகம்

உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer