வாஷிங்டன்:
வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் எச்-1பி விசாவை இந்தஆண்டு இறுதி வரை ரத்து செய்வதாக அறிவித்துள்ள டிரம்ப் அரசுக்கு எதிராக,  174 இந்தியர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அமெரிக்காவில் பணியாற்ற எச்1பி, எச்4, எச்2-பி மற்றும் எல்1 உட்பட  ‘எல்’ ரக விசாக்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. சுமார் 5 லட்சம் இந்தியர்கள் இதுபோன்ற விசாக்கள் மூலமே அங்கு பணியாற்றி வருகின்றனர்.  மேலும்,   3 லட்சம் இந்தியர் வரை எச்1பி விசா பெற விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையிலதான், கொரோனா தொற்று பரவல் காரணமாக  அமெரிக்கா பொருளாதாரம் சரவை சந்தித்துள்ளதால்,  இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து மீளும் வகையில், வெளிநாட்டவர் களுக்கு வழங்கப்படும் எச்-1 பி உள்ளிட்ட வேலைவாய்ப்பு விசாக்கள் இந்த ஆண்டுஇறுதி வரை ரத்து செய்யப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அங்குள்ள  பல பெரிய நிறுவனங்கள் கூட இழுத்து மூடப்பட்ட தால், அமெரிக்காவில்  மட்டும் ஒரு கோடி பேர் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு பணிகள் வழங்கும் நோக்கில்,  எச்1பி, எல்1 விசாக்களை ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.  டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு   அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த உத்தரவின் மூலம் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் வெளிநாட்டவர்களுக்கான எச்-1பி வேலைவாய்ப்பு விசா ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக 174 இந்தியர்கள் அடங்கிய குழு ஒன்று அமெரிக்காவில் உள்ள கொலம்பியா நிதிமன்றத்தில் டிரம்ப் அரசு மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த மனுமீது விசாரணை நடத்திய  கொலம்பியா நிதிமன்றம், மனு தொடர்பாக வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பாம்பியோ மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் சாட் எஃப் வுல்ஃப் மற்றும் தொழிலாளர் செயலாளர் யூஜின் ஸ்காலியா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
அதிபர் டிரம்பின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த அமெரிக்க வர்த்தக சபை, விசாக்களை ரத்து செய்யும் நடவடிக்கை நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை குறைக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.