பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அந்தகாரம்’. அனைத்துப் பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாரானபோது கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியது.
இந்நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ‘அந்தகாரம்’ படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியது.
தற்போது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ‘அந்தகாரம்’ வெளியீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகும் என்றும், விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் தென்னிந்திய மொழிப் படமாக ‘அந்தகாரம்’ இருக்கும் எனத் தெரிகிறது.