NCP’s Sharad Pawar Meets Congress Chief Sonia Gandhi On Presidential Polls

 

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்துப் பேசினார்.

 

ஜூலை மாதம் 25ஆம் தேதிக்குள் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளரை நிறுத்துவதற்கான ஆலோசனைகளைத் தலைவர்கள் தொடங்கி உள்ளனர்.

 

சில தினங்களுக்கு முன், பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார், மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினர்.

 

இந்நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த முக்கியக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் சோனியாகாந்தியை சந்தித்துப் பேசியுள்ளார்.

 

இந்த சந்திப்பு குடியரசுத் தேர்தலை மட்டுமின்றி, வரும் 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையும் மையப்படுத்தியே அமைந்ததாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தாரிக் அன்வர் கூறியுள்ளார்.

 

குடியரசுத் தேர்தலை ஒட்டியே, நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகங்களையும் தலைவர்கள் வகுக்கத் தொடங்கி விட்டார்கள் என்பது தெரிகிறது.