தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் பிஸியாக நடித்து வரும் நயன்தாராவை கலர்ஸ் டிவி-யில் பார்க்கலாம், என்று சேனல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பெரும் விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கலர்ஸ் டிவியே இந்த சஸ்பென்ஸை உடைத்திருக்கிறது.

நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்ற ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தை வரும் மே 12 ஆம் தேதி கலர்ஸ் டிவியில் ஒளிபரப்ப இருக்கிறார்கள். இதுவரை நேரடி தமிழ்த் திரைப்படங்களை ஒளிபரப்பாமல் இருந்த கலர்ஸ் டிவி முதல் முறையாக நேரடி தமிழ் படத்தை ஒளிபரப்பு செய்கிறது. அதனால் தான் இப்படி ஒரு பதிவை வெளியிட்டு சர்பரைஸ் வைத்ததாம்.