கோவிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி….!

Must read

தமிழ் திறையுலகின் ஹாட் காதலர்களான நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி தினம் தினம் தங்களது ரசிகர்களுக்கு பல கியூட் புகைப்படங்களை பகிர்ந்து வருக்கின்றனர்.

சமீபத்தில் விக்னேஷ் சிவன் , நயன்தாரா இருவரும் தனி விமானம் மூலம் கேரளா சென்றது, பின் விக்னேஷ் சிவன், அவரது தாயார் மற்றும் நடிகை நயன்தாரா கோவாவுக்கு சுற்றுலா பயணம் . அங்கு விக்னேஷ் சிவன் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

கோவாவில் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து ரொமான்டிக் பிறந்தநாளாக கொண்டாடினார் நயன்.

சமீபத்தில் , நடிகை நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். விஐபி தரிசனம் மூலம் இன்று காலை திருப்பதி ஏழுமலையானை தரிசித்த அவர்களுக்கு ரங்கநாயக மண்டபத்தில் வேதங்கள் முழங்க தேவஸ்தான பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த அவர்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் மஹாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். அதோடு, மும்பையிலுள்ள சித்தி விநாயகர், மஹாலட்சுமி கோவில், மும்பதேவி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டுள்ளனர்.

More articles

Latest article