நயன்தாரா தற்போது ஹீரோக்கள் இல்லாமல் அவரே கதையின் கதாநாயகியாக நடித்து வருக்கிறார். தற்போது ‘டோரா’ என்னும் பேய் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.
இதையடுத்து ‘கொலையுதிர் காலம்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை சக்ரி டோல்டி இயக்குகிறார். இப்படத்தில் நயன்தாரா காது கேட்காத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார்.
ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தில் காது கேட்காதவராக நடித்துள்ளார். இப்படம் காமெடி கலந்த கதையாக இருந்தது. ஆனால் கொலையுதிர் காலம் படம் சீரியஸான கதையில் உருவாகிறது.