
உலக பிரபலமான இதழ் ’வோக்’-ன் இந்தியா தன்னுடைய 12வது வருடத்தைக் கொண்டாடுகிறது. வோக் இந்திய இதழ் எப்போதுமே பாலிவுட் பிரபலங்களையே குறிவைக்கும். ஆனால் சிறப்பு இதழாக தென்னிந்திய சினிமாவை போற்றும் இதழாக வெளிவந்துள்ளது.
வோக்கின் அட்டைப்படத்தில் இடம் பெறுவது என்பதும் வரமாகவே கருதி வருகின்றனர் .
அப்படிப்பட்ட வோக் மலையாளத்தில் துல்கர் சல்மான், தெலுங்கில் மகேஷ் பாபு மற்றும் தமிழிற்காக நயன்தாராவை அட்டைப் படத்தில் வைத்துள்ளது. இவர்கள் மூவர்தான் தென்னியந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திரங்களாக அறிமுகப்படுத்தியுள்ளது.
வோக் நேர்காணலின் இறுதியில் விக்னேஷ் ஷிவனை நயன்தாராவின் வாழ்க்கைத் துணை (fiancé) என்று குறிப்பிட்டுள்ளது.
வோக்கின் நேர்காணலில் நயன்தாரா “ என்னை ஏளனமாக பார்த்தோர், நகைத்தோர் அனைவருக்கும் நான் ஒருபோதும் பதில் சொன்னதில்லை. அவர்களுக்கான சிறந்த பதில் என்னுடைய வெற்றிப் படங்கள்தான் ” என்று குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]