நகரின் பல்வேறு இடங்களில் வெற்றிகரமாக இயங்கி வரும் கடை சரவணா ஸ்டோர்ஸ். இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான அருள் நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்து வருகிறார் .

விளம்பரங்களில் நடித்து வந்த அருளுக்கு சினிமாவில் நடிக்க ஆசை வந்து விட்டது .இந்த நிலையில் அவர் நடிக்கவுள்ள படத்தை அவர் நிறுவனங்களின் நிரந்தர விளம்பர இயக்குநர்களாக உள்ள ஜேட்-ஜெர்ரி இரட்டையர்கள் இயக்கவுள்ளார்கள். தற்போது படத்தில் நடிக்கவுள்ள நட்சத்திரங்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அவருக்கு ஜோடியாக ஏற்கனவே விளம்பரப் படத்தில் நடித்த ஹன்சிகா நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியானது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஹன்சிகா ‘அது உண்மையில்லை’ என்று மறுத்து விட்டார் .