நயன்தாரா டாகுமெண்டரி தொடர்பாக தனுஷ் தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்ப்ளிக்ஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற காட்சிகளை நயன்தாரா குறித்த ஆவணப் படத்தில் இணைத்திருந்தனர்.

இதுதொடர்பாக நயன்தாரா மற்றும் அந்த ஆவணப் படத்தை தயாரித்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் மீது ரூ. 10 கோடி கேட்டு ஒண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தனுஷின் இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு அளித்திருந்தது.

இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்ற நிலையில் தனுஷுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.