‘பத்ம’ அவார்டை ஏற்க மறுத்த ஒடிசா முதல்வரின் சகோதரி கீதா மேத்தா! மோடி அதிர்ச்சி

Must read

டில்லி:

பாஜக கூட்டணி முன்னாள் கூட்டணி கட்சியான பிஜூ ஜனதா தளம் கட்சி தலைவர்ன ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரி கீதா மேத்தாவுக்கு மத்திய அரசு பத்ம அவார்டு அறிவித்து உள்ளது. ஆனால், அதை ஏற்க கீதா மேத்தா மறுப்பு தெரிவித்து உள்ளார். இது மோடி அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள  நேரத்தில் பத்மஸ்ரீ விருது கொடுத்திருப்பதை ஏற்க  இயலாது என்று தெரிவித்து உள்ளார்.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு நேற்று இரவு வெளியானது. இதில், ஒடிஷா முன்னாள் முதல்வரும் மறைந்த  பிஜூ பட்நாயக்கின் மகனும்,  தற்போதைய முதல்வர் நவீன் பட்நாயக்கின் மூத்த சகோதரியுமான  கீதா மேத்தாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஏற்கனவே  பாரக் ஒபாமா குறித்த புத்தகம், மற்றும் டோனி பிளேர் உள்பட 6 நோபல் பரிசு பெற்றவர்களை குறித்த புத்தங்களை வெளியீட் டுக்கான சிறந்த விற்பனையாளர் விருதை பெற்றுள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக மோடி அரசு அறிவித்தது. ஏற்கனவே அவரது சகோதரர் நவீன் பட்நாயக் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து வந்த நிலையில்,  பிஜு ஜனதாதளம் பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்தது. ஆனாலும், பாஜகவுக்கு ஆதரவாகவே நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவரது சகோதரிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இது சலசலப்பை ஏற்படுத் தும் என்று கருதிய கீதா மேத்தா, நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், தற்போதைய நிலையில் பத்மஸ்ரீ விருதுதை ஏற்க இயலாது என்று தெரிவித்து உள்ளார்.

மேலும்,  பத்மஸ்ரீ விருதுக்கு நான் தகுதியானவள் என்று அரசு முடிவு செய்திருப்பது எனக்கு கவுரவம்தான், ஆனால், தற்போது, இதை நான் ஏற்கக் கூடாது என்று எனது மனது சொல்கிறது என்று தெரிவித்துள்ளவர், . பொதுத் தேர்தல் வரும் நேரத்தில், இந்த விருது அறிவிக்கப்பட்டிருப்பது தவறான கருத்துக்களை ஏற்படுத்தும், எனக்கு மட்டுமல்லாமல் அரசுக்கும் கூட இது தர்ம சங்கடத்தைக் கொடுக்கும். எனவே இதை நான் ஏற்க இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பத்மா அவார்டு பட்டியலில் பாஜக ஆதரவாளர்கள் பலருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், கீதா மேத்தா அவார்டை ஏற்க மறுத்துள்ளது மோடி அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article