மணி ரத்னத்தின் ‘நவரசா’ ஆந்தாலஜி வெப் தொடர் ஆகஸ்ட் 6-ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியீடு….!

Must read

மணி ரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் இருவரும் வழங்கியுள்ள ஒன்பது திரைப்படங்களின் தொகுப்பான நவரசா எனும் தமிழ்த் தொகுப்பை நெட்ஃபிலிக்ஸ் அறிவித்துள்ளது.

ஒன்பது திரைப்படத் தொகுப்புகளை கொண்டிருக்கும் நவரசா நெட்ஃபிலிக்ஸ் 190 நாடுகளில் அறிமுகம் செய்கிறது.

கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது ரசங்களை (உணர்ச்சிகளை) அடிப்படையாகக் கொண்டவை இந்தப் படங்கள்.

இந்த தொகுப்பில், அரவிந்த் சுவாமி, பிஜோய் நம்பியார், கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன், கே.வி. ஆனந்த், பொன்ராம், ரதிந்திரன் பிரசாத், ஹலிதா ஷமீம் என ஒன்பது இயக்குநர்கள் இயக்குகிறார்கள் .

நடிகர்கள் ரேவதி, நித்யா மேனன், பார்வதி திருவோத்து, ஐஸ்வர்யா ராஜேஷ், அரவிந்த் சுவாமி, சூரியா, சித்தார்த், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், பிரசன்னா, கௌதம் கார்த்திக், அசோக் செல்வன், பூர்ணா, ரித்விகா, ரோபோ சங்கர் ஆகியோர் இதில் இணைந்துள்ளனர் .

40க்கும் மேற்பட்ட நடிகர்களும், பல நூறு படைப்பு வல்லுநர்களும், திரைப்படத் தொழில்நுட்ப வல்லுநர்களும் பங்கு கொண்டுள்ளனர்.

ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் சிவன், பாலசுப்பிரமணியம், மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜம், ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, ஹர்ஷ்வீர் ஓபராய், சுஜித் சரங், வி பாபு மற்றும் விராஜ் சிங் ஆகியோர் இணைந்துள்ளனர் . ஏ.ஆர்.ரஹ்மான், டி இம்மான், கிப்ரான். அருல்டேவ், கார்த்திக், ரான் ஈதன் யோஹான், கோவிந்த் வசந்தா மற்றும் ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோர் ஆந்தாலஜிக்கு இசையமைக்கவுள்ளனர்.

பட்டுகோட்டை பிரபாகர், செல்வா, மதன் கார்க்கி மற்றும் சோமேதரன் ஆகியோர் எழுத்தாளர்களாக இணைந்துள்ளனர் .

கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்ற ஆந்தாலாஜி உருவாகி வருகிறது .

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள கதைக்கு ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம் பணிபுரிந்துள்ளார்.

இந்த நவரசா வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

 

More articles

Latest article