டெல்லி: தேசிய தேர்வு முகமை, 2024ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024ம் ஆண்டு மே 5-ம் தேதி  இளநிலை மருத்துவ படிப்புப்பான  நீட் தேர்வு நடைபெறும் என்றும், ஜூன் இரண்டாம் வாரத்தில் முடிவு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு எழுத வேண்டியது கட்டாயம். இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி,  2024 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்து .

2023ம் ஆண்டு நீட் நுழைவு தேர்வு மே 7 ஆம் தேதி நடைபெற்று மாணவர்கள் சேர்க்கை முடிந்த நிலையில், அடுத்தாண்டுக்கான (2024)  நீட் நுழைவுத் தேர்வு எப்போது நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அதன்படி 2024 ஆம் ஆண்டு நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான முடிவுகள் ஜூன் 2வது வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.