தமிழகம்: 23 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது!

Must read


புதுடெல்லி:
மிழகத்தை சேர்ந்த 23 ஆசிரியர்கள் மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அடுத்தமாதம் ஜனாதிபதி விருது வழங்குகிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த 23 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டெல்லியில் வரும் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.
pranab_1892576f
ஆசிரியர் பணியைப் போற்றும் வகையில் மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விருது, ரூ.50 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப்பதக்கம், பாராட்டுச்சான்று ஆகியவற்றை உள்ளடக்கியது.
கடந்த 2015-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் தொடக்கக்கல்வி பிரிவின் கீழ் 15 ஆசிரியர்களும், மேல்நிலைக் கல்வி பிரிவின் கீழ் 7 பேரும், சிறப்புப்பிரிவின் கீழ் ஒருவரும் என மொத்தம் 23 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
வரும் 5ந்தேதி டெல்லியில் நடைபெறும் ஆசிரியர் தினவிழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.
தமிழகத்தில் இருந்து தேசிய நல்லாசிரியர் விருது பெறுவோர் விவரம் வருமாறு:
தொடக்கக்கல்வி பிரிவு :

 1. கே.சயீத் பசீர், தலைமை ஆசிரியர், பாஹீ யத் சலிஹத் தொடக்கப்பள்ளி, வேலூர்.
 2. ஏ.பர்னபாஸ், தலைமை ஆசிரியர், ஆர்.சி. நடுநிலைப்பள்ளி, மேலபழங்கூர், சங்கரா புரம், விழுப்புரம்.
 3. ஆர்.பாலு, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீச்சாங்குப்பம், நாகப்பட்டினம்.
 4. ஜி.சத்தியமூர்த்தி, தலைமை ஆசிரியர், சரஸ் வதி அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, ஏரி ஊத்துக்காடு, வலங்கைமான், திருவாரூர்.
 5. சி.பழனியம்மாள், தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மீன்சுருட்டி, அரியலூர்.
 6. கே.பவுன், தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நொச்சிப்பாளை யம், ஆத்தூர், கரூர்.
 7. எஸ்.அபிராமி, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ராஜ சூரியமடை, ராமநாதபுரம்.
 8. எஸ்.கணேசன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கே.உன்னிப்பட்டி, கள்ளிக்குடி, மதுரை.
 9. பி.தனலட்சுமி, தலைமை ஆசிரியை, ரங்ககிருஷ்ணன் நடுநிலைப்பள்ளி, வடகரை, பெரியகுளம், தேனி.
 10. எஸ்.பொன்னகேசா, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பேட்டரப்பள்ளி, ஓசூர்.
 11. சி. தங்கவேலு, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெருந்துறை வடக்கு, ஈரோடு.
 12. கே.சந்திரசேகர், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கன்னந்தேரி, சங்ககிரி, சேலம்.
 13. கே.எஸ்.மணி, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சோமவாரப்பட்டி- பெதப்பம்பட்டி, உடுமலைப்பேட்டை, திருப்பூர்.
 14. கே.கலாவதி, தலைமை ஆசிரியை, அரசு பழங்குடியினர் உறைவிட நடுநிலைப்பள்ளி, கூடலூர், நீலகிரி.
 15. எஸ்.தங்கலட்சுமி, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ராமு தேவன்பட்டி, விருதுநகர்.

மேல்நிலைக்கல்வி பிரிவு:

 1. எஸ்.சரஸ்வதி, தலைமை ஆசிரியை, திரு.அஞ்சுவட்டத்தம்மன் அரசு உயர்நிலைப் பள்ளி, கீழ்வேளூர், நாகப்பட்டினம்.
 2. வி.ராஜூ, தலைமை ஆசிரியர், சிஎஸ்ஐ கார்லி மேல்நிலைப்பள்ளி, கிழக்கு தாம்பரம்
 3. என்.டி.நடராஜன், தலைமை ஆசிரியர், ஏ.எஸ். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருக்கோவிலூர், விழுப்புரம்.
 4. அருட்சகோதரர் கே.ஜெ.வர்கீஸ், தலைமை ஆசிரியர், மாண்ட்போர்டு ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, ஏற்காடு.
 5. என்.ரமணிசேகர், பட்டதாரி ஆசிரியர், காந்தி நிகேதன் ஜி.வெங்கடாசலபதி மேல்நிலைப்பள்ளி, டி.கல்லுப்பட்டி, மதுரை.
 6. ஏ.விஜயகுமார், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, தேவதானம்பட்டி, பெரியகுளம், தேனி.
 7. எஸ்.ஞானசேகரன், பட்டதாரி ஆசிரியர், பி.எஸ்.உயர்நிலைப்பள்ளி (வடக்கு), மயிலாப்பூர்.

சிறப்பு பிரிவு:

 1. எம்.வி.ரவிச்சந்திரன், தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி, வேலந்தூர், அரூர், தருமபுரி.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

More articles

Latest article