சென்னையில் அகில இந்திய ஹாக்கி போட்டி!  நாளை ஆரம்பம்!!

Must read

சென்னை:
கில இந்திய ஹாக்கி போட்டி நாளை சென்னையில் ஆரம்பமாகிறது.  இதில் 10 அணிகள் பங்கேற்கிறது.

சென்னை கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி) மற்றும் முருகப்பா குழுமம் சார்பில் அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னையில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான 90-வது அகில இந்திய எம்.சி.சி.- முருகப்பா தங்க கோப்பை ஹாக்கிப்போட்டி நாளை முதல் 11-ந்தேதி வரை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

இந்தியா முழுவதும் இருந்து .  10 அணிகள் பங்கேற்கின்றன. அவை  இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் (ஐ.ஒ.சி), பாரத் பெட்ரோலியம் நிறுவனம் (பி.பி.சி.எல்.), ஏர்இந்தியா, ஹாக்கி தமிழநாடு யூனிட், மும்பை ஹாக்கி சங்கம் ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் ராணுவ லெவன், பஞ்சாப் சிந்து வங்கி, ஒ.என்.ஜி.சி, ஹாக்கி கர்நாடகா, இந்தியன் ரெயில்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அரை இறுதி 10-ந்தேதியும், இறுதிப் போட்டி 11-ந்தேதியும் நடக்கிறது.ரியோ ஒலிம்பிக் போட்டியில் விளையாடிய வி.ஆர்.ரகுநாத், எஸ்.வி.சுனில் இதில் விளையாடுகிறார்கள்.
சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். இது கடந்த ஆண்டைவிட அதிகமாகும். கடந்த முறை சாம்பியன் அணிக்கு ரூ.2½ லட்சம் வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ. 2½ லட்சம் (கடந்த முறை ரூ.1.50 லட்சம்) கிடைக்கும். இதுதவிர சிறந்த வீரர்கள் 5 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் சைக்கிள் பரிசாக வழங்கப்படும்.
நாளை நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் ஏர் இந்தியா- ஹாக்கி தமிழ்நாடு, பஞ்சாப் சிந்து வங்கி- ஹாக்கி கர்நாடகா அணிகள் மோதுகின்றன.

மாலை 4 மணி முதல் போட்டிகள் ஆரம்பமாகின்றன.

More articles

Latest article