திரையரங்குகளில் தேசியகீதத்தை கண்டிப்பாக ஒலிபரப்ப வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதி மன்றப் பிறப்பித்திருப்பது அனைவரும் அறிந்ததே! இந்த வழக்கு 13 ஆண்டுகளுக்கு முன்னர் அதே மனுதாரர் ஷ்யாம் நாராயண் செளக்சி என்பவரால் மத்திய பிரதேச உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டது. இதில் ஒரு அற்புதம் என்னவென்றால் அப்போது அந்த வழக்கை விசாரித்தவரும் இதே நீதிபதி தீபக் மிஸ்ராதான் என்பது குறிப்பிடத்தக்கது.

dipak_misra

நீதிபதி தீபக் மிஸ்ரா (நடுவில் இருப்பவர்)

இந்த அதிசயமான ஒற்றுமை தற்செயலானதுதான் என்று குறிப்பிடுறார் மனுதாரர் ஷ்யாம் நாராயண் செளக்சி
கடந்த 2003-ஆம் ஆண்டு மத்திய பிரதேச உயர்நீதி மன்றத்தில் இயக்குநர் கரண் ஜோகர் இயக்கத்தில் வெளிவந்த கபி குஷி கபி கம் என்ற படத்தில் தேசிய கீதத்தை அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை அப்போது விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா அந்தக் காட்சியை நீக்கச்சொல்லி உத்தரவிட்டிருந்தார்.
தற்பொழுதும் மனுதாரர் ஷ்யாம் நாராயண் செளக்சி தனது மனுவில் திரையரங்குகள் மற்றும் அரசு விழாக்களில் தேசிய கீதம் பாடுதல் அல்லது ஒலிபரப்புவதற்கான சரியான நெறிமுறைகளை வகுக்குமாறு குறிப்பிட்டு இருந்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தேசிய கீதம் என்பது இது இறையாண்மை பொருந்திய இந்தியாவின் மரியாதைக்கும் பெருமைக்கும் உரிய அடையாளம் ஆகும். அனைத்து திரையரங்குகளிலும் படக்காட்சி தொடங்குவதற்கு முன்னர் தேசிய கீதம் இசைக்கபடவேண்டும் என்றும் அப்பொழுது மக்கள் அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.