தஞ்சை:

நேற்று தஞ்சையில் நடைபெற்ற நடராஜன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு சீமான் பேசியதாவது:

“இந்தித் திணிப்பால் எங்கே தமிழ்மொழி அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் களத்தில் பாய்ந்த எண்ணற்ற வீர மறவர்களில் நடராஜனும் ஒருவராவார்.

முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு நிகழ்வு மூன்று தினங்கள் நடைபெற்றது. அதில் நானும் என்னுடைய மனைவியும் கலந்துகொண்டோம். நிகழ்வின் இறுதி நாளில் ரூபாய் 2 லட்சம், 3 லட்சம் என்று பலரும் நிதி அளித்தனர்.   நான் அமைதியாக இருந்தேன்.

ஏனென்றால்,  என்னிடம் அப்போது பணம் இல்லை. இது நடராஜனுக்குத் தெரிந்துவிட்டது. உடனே என்னை மேடைக்கு அழைத்துச் சென்று எல்லோரும் நிதி அறிவித்துவிட்டார்கள். நீ அறிவிக்கவில்லை என்றால் நன்றாக இருக்காது. நீ ஐந்து லட்சம் ரூபாய் நிதி அளிப்பதாக அறிவித்துவிடு.  அந்த பணத்தை நெடுமாறன் ஐயாவிடம் நான் கொடுத்துவிடுகிறேன் என்றார். வேண்டாம் என்றேன். அதற்கு நடராஜன், நான் சொல்கிறேன் நீ நிதி வழங்குவதாய் அறிவிக்கிறாய் என்று கண்டிப்பான குரலில் சொன்னார்.

அந்த நேரத்தில் என் தன்மானத்தைக் காத்த தகப்பன் ஐயா நடராஜன்” என்று சீமான் பேசினார்.