‘கேவலமான கண்கள்:’ ஸ்ரீபிரியாவுக்கு பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

Must read

சென்னை,

னது “சொல்லுவதெல்லாம் உண்மை” டிவி நிகழ்ச்சியை விமர்சித்த நடிகை ஸ்ரீபிரியாவுக்கு “கேவலமான கண்கள்” என லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் “சொல்லுவதெல்லாம் உண்மை” என்ற நிகழ்ச்சிக்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பி வருகிறது. அப்பாவி மக்களின் குடும்பப் பிரச்சினைகளை வெளிச்சம்போட்டுக் காட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதே கருத்தை நடிகை ஸ்ரீபிரியாவும் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு, அவரது ரசிகர் ஒருவர், “உங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்னுடைய கண்களை திறந்துவிட்டது” என்று ட்விட் செய்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், “என்னுடைய நிகழ்ச்சி குறித்த கண்ணோட்டம் பார்ப்பவர்களின் மனநிலையை பொறுத்தது.

கேவலமான மனது கொண்டவர்களுக்கு,கோவிலுக்குள் இருக்கும் சிலைகளை பார்த்தால் கூட செக்சியாகத்தான் தெரியும்” என  தெரிவித்துள்ளார்.

இந்த பதிலை நடிகை ஸ்ரீப்ரியாவை மனதில் வைத்தே லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

இதற்கு ஸ்ரீப்ரியா என்ன பதில் சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More articles

Latest article