நேசல் ஸ்பிரே : கொரோனா வைரஸில் இருந்து 48 மணிநேரத்தில் 99 சதவீதம் பேர் குணம்

Must read

மும்பையை சேர்ந்த கிளென்மார்க் நிறுவனம் கனடாவின் சனோடைஸ் நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ள மூக்கு வழியே பயன்படுத்தக்கூடிய (நேசல் ஸ்பிரே) தடுப்பு மருந்து கொரோனாவில் இருந்து 99 சதவீதம் குணமளிப்பதாக கூறப்படுகிறது.

நைட்ரிக் ஆக்சைடு நாசல் ஸ்பிரே (NONS) மருந்தின் 3ம் கட்ட பரிசோதனை இந்தியாவின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மற்றும் போட்டுக்கொள்ளாத 306 பேரிடம் மேற்கொள்ளப்பட்டது.

இதில், 93.7 சதவீதம் பேருக்கு 24 மணிநேரத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்ததாகவும் 99 சதவீதம் பேருக்கு 48 மணி நேரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மூக்கின் வழியே மருந்து செலுத்தியபின் உடலில் கொரோனா வைரசுக்கு எதிரான ரசாயன தடையை உருவாக்கும். மேலும் சுவாசபாதையின் துவக்கத்திலேயே வைரசை அழிக்கும். இதன்மூலம் நுரையீரலுக்கு வைரஸ் செல்வது தடுக்கப்படும் என்று அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்று கட்ட பரிசோதனைகள் முடிவடைந்ததை அடுத்து இந்தியாவில் விரைவில் இந்த தடுப்பூசி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article