இன்ஃபோசிஸ் நிறுவனர்கள் நாராயணமூர்த்தி மற்றும் அவர் மனைவி சுதா மூர்த்தியின் வாழ்க்கைக் கதையைத் திரைப்படமாக எடுக்கவுள்ளார் அஷ்வினி ஐயர் திவாரி .

‘மூர்த்தி’ என்று தலைப்பிட்டிருக்கும் இந்தப் படத்தைப் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுதா மூர்த்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் அஷ்வினி பகிர்ந்துள்ளார்.

1981ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் என்ற ஐடி நிறுவனத்தை ஆரம்பித்தார் நாராயணமூர்த்தி. டெல்கோ நிறுவனத்தால் வேலைக்கு அமர்த்தப்பட்ட முதல் பெண் இன்ஜினியர் சுதா.