மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வளம் வந்த மஞ்சு வாரியர், திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்ட அவர் தற்போது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

ரீ எண்ட்ரியாக ‘அசுரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மஞ்சு வாரியர் தற்போது ரஜினிகாந்தின் 168 வது படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.