ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் ‘பெண்குயின்’ .

இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் கொடைக்கானலில் தொடங்கப்பட்டது.

கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளை முன்னிட்டு, ஈஸ்வர் கார்த்திக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என அறிவித்திருந்தார் .அதன்படி ‘பெண்குயின்’ எனப் படத்துக்கு தலைப்பிட்டு, ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக கார்த்திக் பழனி, எடிட்டராக அனில் க்ரிஷ் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள். முழுக்க த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது.