கமதாபாத்

கமதாபாத் நகரில் திறக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி விளையாட்டு அரங்கத்தில் பந்து வீசும் முனைகளுக்கு ரிலையன்ஸ் மற்றும் அதானி பெயர்கள் இடப்பட்டுள்ளன.

அகமதாபாத்தில் இன்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நரேந்திர மோடி விளையாட்டு அரங்கம் என்னும் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் விளையாட்டு அரங்கைத் தொடங்கி உள்ளார்.  இந்த விளையாட்டரங்கம் மோடெரா பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி விளையாட்டரங்கம் 63 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.  இங்கு ஒரே நேரத்தில் 1,32,000 பேர் அமர முடியும்,.  இந்த அரங்கத்துக்குப் பிரதமரின் பெயரைச் சூட்டியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பல மூத்த விளையாட்டு வீரர்கள் இருக்கையில் மோடியின் பெயர் வைத்தமைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.   இதற்கு முன்பு இந்த அரங்குக்கு சர்தார் படேல் பெயர் இடப்பட்டிருந்தது.

தற்போது இந்திய  இலங்கை அணிகளின் கிரிக்கெட் போட்டி இந்த அரங்கில் நடைபெற்று வருகிறது.  இதில் இரு பவுலிங் முனைகளில் ஒரு முனைக்கு அதானி எண்ட் மற்றும் மற்றொரு முனைக்கு ரிலையன்ஸ் எண்ட் எனவும் பெயரிடப்பட்டுள்ளது.  இதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலை தளங்களில் தாறுமாறாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

[youtube https://www.youtube.com/watch?v=5M0_08XeT1g]