குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. அங்கு 6 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிவு நேற்று வெளியிடப்பட்டது. (இன்னும் சில நாட்களில் நகராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது)

ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அசாதுதீன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி குஜராத் உள்ளாட்சி தேர்தலில் முதன் முறையாக களம் இறங்கியது.

அகமதாபாத் மாநராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு 22 வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. ஒவைசி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அகமதாபாத் மாநகராட்சியில் 7 வார்டுகளை ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி கைப்பற்றி வியக்க வைத்துள்ளது.

பீகாரில் அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒவைசி கட்சி போட்டியிட்டு, 5 இடங்களில் வென்றது.

எதிர்க்கட்சி ஓட்டுகளை அவர் கட்சி பிரித்ததால், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடித்தது.

மே.வங்க தேர்தலிலும் ஒவைசி கட்சி போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.

– பா. பாரதி