சண்டிகர்:

தானி, அம்பானி போன்ற பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கிதான் பிரதமர் மோடி என்று அரியானா மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்   ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.

அரியானா, மகாஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் உள்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் களும் வரும் 21ந்தேதி நடைபெற உள்ளது.

லோக்சபா தேர்தலுக்கு பின்பு வரும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதாலும், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, என்ஆர்சி பிரச்சினை போன்றவற்றுக்கு பிறகு நடைபெற உள்ள தேர்தல் என்பதால், அரியானா, மகாராஷ்டிரா மாநிலத்தில், காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாடு முழுவதும் மக்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி விருகிறது.

இந்த நிலையில், அரியானா மாநிலத்தில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அங்குள்ள  நுஹ் மாவட்டத்தில் நடந்த காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, பிரதமர் மோடி,  அம்பானி, அதானி போன்ற பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கியாக செயல்பட்டு வருகிறார் என்றும், ஏழைகளின் பாக்கெட்டில் இருந்து பணத்தை உருவி,  அதை தனது 15 பணக்கார நண்பர்களின் பாக்கெட்டில் போடுகிறார் என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசியவர், மோடியை  பார்க்க வேண்டுமென்றால், டிரம்ப், அம்பானி போன்றவர்களுடன்தான் பார்க்க முடியுமே தவிர விவசாயிகளுடன் பார்க்க முடியாது என்று கூறியவர், மோடி தன்னை உண்மையான தேசியவாதியாக கூறிக்கொண்டால், எதற்காக பொதுத்துறை நிறுவனங்களை பணக்கார நண்பர்களுக்கு விற்கிறார்? என்று கேள்வி விடுதத்தார்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்ட வேண்டுமானால், ஏழைகளின் பாக்கெட்டில்தான் பணத்தை போட வேண்டுமே, தவிர தனது பணக்கார நண்பர்களின் பாக்கெட்டில் பணத்தை போடக்கூடாது என்று சாடியவர், பாரதிய ஜனதா கட்சியும், ஆர்.எஸ்.எஸ்.சும் சாதி, மதம், பிராந்தியம் அடிப்படையில் வெள்ளைக்காரர்களைப் போல் நாட்டை பிளவுபடுத்துகின்றன என்று குற்றம்சாட்டினார். ஆனால், காங்கிரஸ் கட்சிதான் மக்களை ஒன்றுபடுத்தி வருகிறது என்றும் கூறினார்.