கொல்கத்தா

நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியின் தாய் நிர்மலா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.

நேற்று பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.   இந்த பரிசை இந்தியாவில் பிறந்த அபிஜித் முகர்ஜி, அவர் மனைவி எஸ்தர் டஃப்ளோ, மற்றும் மைக்கேல் கிரிமியர் ஆகிய மூவரும் பகிர்ந்துக் கொள்கின்றனர்.   இந்தியாவின் அபிஜித் முகர்ஜி தற்போது அமெரிக்கக் குடியுரிமை பெற்றுள்ளார்.

டெல்லி ஜவகர்லால் பல்கலைக் கழகம், கொல்கத்தா பல்கலைக் கழகங்களில் படித்த அபிஜித் உயர் கல்வியை அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் முடித்தார். தற்போது அவர் பொருளாதாரத்திற்கான சர்வதேச பேராசிரியராக அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் பணியாற்றி வருகிறார். அபிஜித் குறித்து அவர் தாயார் நிர்மலா பானர்ஜி செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.

இந்திரா பானர்ஜி,  “என் மகன் எழுத்தளவில் இருக்கும் பொருளாதார கருத்துக்களை விட்டு சற்று ஓரமாக இருப்பார். அனைத்து மக்களுக்கும் நடைமுறையில் பொருளாதாரத்தை எப்படிச் சிறப்பாகப் பயன்படுத்துவது என்பதில்தான் அபிஜித்தின் கவனம் எப்போதும் இருக்கும்.

அவரது சிந்தனை வறுமையை எப்படிக் கையாள்வது, இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி வறுமையை எப்படி ஒழிப்பது, அதற்கான கொள்கைகள் வகுப்பது என்பதில் தான் இருக்கும்.  நோபல் பரிசு பெற்ற மற்றவர்களான எஸ்தர் டஃப்ளோவும், மைக்கேல் கிரிமியரும் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி இருக்கின்றனர்.

எனது மகன் இந்தியராக இருப்பதில் தான் பெருமை கொள்கிறார். சிறு வயது முதலே அபிஜித் அறிவு ஞானம் மிக்கவராக, ஒழுக்கம் உள்ளவராக இருக்கிறார். அவரை எண்ணி பெருமை அடைகிறேன்.

அது மட்டுமின்றி அவருக்கு நோபல் பரிசு கிடைத்ததன் மூலம் எனக்கு மட்டுமின்றி இந்த நாட்டில் உள்ள அனைவருக்கும் ஒரு மகனாக ஆகி உள்ளார்” எனப் பெருமிதத்துடன் கூறி உள்ளார்.