கிரண்பேடி குறித்து அவதூறு: நாஞ்சில் சம்பத் மீது 3 பிரிவுகளில் வழக்கு

Must read

புதுச்சேரி:

புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்த நாஞ்சில் சம்பத், மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளரான வைத்தி லிங்கத்தை ஆதரித்து பேசிய நாஞ்சில் சம்பத், ஆளுநர் கிரண்பேடி, ஆணா, பெண்ணா என்பதே தெரியவில்லை என்று சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து பேசினார். தொடர்ந்து  தட்டாஞ் சாவடி இடைத்தேர்தல் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் வெங்கடேசனையும் ஆதரித்து  பிரச்சாரம் செய்தார்.

நாஞ்சில் சம்பத்தின் பேச்சு பரபரப்பை ஏற்டுத்தியது. அவரது தனிப்பட்ட முறையிலான தாக்குதல் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்த நிலையில், நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி,  கிரண்பேடியின் செயலாளர் சுந்தரேசன் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில்,  நாஞ்சில் சம்பத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article