சென்னை

ன்று நாங்குநேரி இடைத் தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் குறித்த  அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் காங்கிரஸ் அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் நேற்று முன் தினம் வரை பெறப்பட்டது.  இந்த தேர்தலில் போட்டியிடம் குமரி அனந்தன், ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன், உள்ளிட்ட 26 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

நேற்று முன் தினம் அவர்களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.  இதில் மூவர் தேர்வு செய்யப்பட்டு அந்த விவரங்களை எடுத்துக் கொண்டு நேற்று அழகிரி டில்லிக்குச் சென்றுள்ளார்.    அவர் நேற்று இரவு தமிழக மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட மூத்த தலைவர்களைச் சந்தித்தார்.

அப்போது இந்த பட்டியல் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பப்பட்டுள்ளது.   இன்று அந்தப் பட்டியலை சோனியா காந்தி பார்வை இட்டு வேட்பாளரைத் தேர்வு செய்ய உள்ளார்.   இன்று இரவுக்குள் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வர உள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.