ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த விஜய்யின் மாஸ்டர் திரைப்படம், ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் ஜனவரி 13 பொங்கல் அன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியானது.

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘வாத்தி கம்மிங்’ பாடல் மிகவும் பிரபலம். அனிருத் இசையமைத்த இப்பாடல் ரிலீஸூக்கு முன்னரே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில் கோவை சட்டசபை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் களமிறங்கி உள்ளார். அவரை ஆதரித்து இன்று நடிகை நமீதா கோவை தெற்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். கையில் தாமரை சின்னத்தை பிடித்தபடி வேனில் சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது தளபதி விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு அவர் ஆடிய நடன வீடியோ வெளியாகியுள்ளது.